2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

“பாடப்புத்தகமாக வெளியிடவும்”

Kogilavani   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மலையக வளர்ச்சிக்கு பிதாமகனாக விளங்கிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வாழ்க்கைக் குறிப்புகள், பாடப்புத்தகமாக வெளியிடப்படுவது காலத்தின் கட்டாயமாகும்' என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது.

இது தொடர்பில் இ.தொ.கா, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது.

இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் வல்லமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கே  உண்டு. நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் விளங்கிய மலையக தொழிற்சங்கங்களின் பிதாமகன் பெரியார் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், வலிமைமிக்க சமூக, அரசியல், தொழிற்சங்க ஸ்தாபனமாக ஸ்திரத்தன்மையுடன் செயற்பட்டவர்.

இந்திய வம்சாவளி மக்கள் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட காலத்தில், பெரியார் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்  'ஒருபுறம் எதிர்ப்பு மறுபுறம் ஒத்துழைப்பு சமரசம்' என்ற தந்திரோபாய வழிமுறையைக் கையாண்டதன் ஊடாக பல உரிமைகளை பெற்றுக்கொடுத்தார்.

குறிப்பாக மலையகத் தமிழர்களின் வரலாறு, தொழிற்சங்க வரலாறு என்பவற்றை மாணவர் சமூகம் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறான விடயங்கள் பரீட்சை வினாத்தாள்களில் வினாக்களாகவும் வரக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும். இலங்கையின் தேசப்பிதாக்களின் வரிசையில்  பெரியார் அமரர் தொண்டமானுக்கும் இடமுண்டு என்பதை வரலாறுகள் சான்று பகிரும்' என ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .