2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

2,500 பெறுவதில் பல்வேறு குளறுபடிகள்: தொழிலாளர்கள் நிர்க்கதி

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட 2,500 ரூபாய் கொடுப்பனவில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன. இத்தொகையை இதுவரை தோட்டத் தொழிலாளர்கள் பூரணமாக பெற்றுக்கொள்ளவில்லை. இதனால், தொழிலாளர்கள் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர' என ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்தத்தத்தில், புதிய முறைமையை அறிமுகப்படுத்துவதாக புதிய தொழிற்சங்கமொன்று ஒப்புக்கொண்டமையினாலேயே, அரசாங்கம் கடனாக வழங்கிய 2,500 ரூபாயை, தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க முன்வந்ததாக முதலாளிமார் சம்மேளனத்தில் தலைவர் ரொஷான் ராஜதுரை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கூறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
  இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,  

'ஜனாதிபதியும், பிரதமரும், தொழில் அமைச்சரும் இணைந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய 2,500 ரூபாய் இடைக்கால கொடுப்பனவு, தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள், தபால் விநியோகம் செய்பவர்கள் போலிருந்து, தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாயை  பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்யசெய்யத் தவறியுள்ளனர்' என்றார்.
'மொனராகலை பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு இக்கொடுப்பனவு முழுமையாக வழங்கப்படவில்லை. அரசாங்கத்தின் கீழுள்ள சில

தோட்டங்களில் குறிப்பாக மாத்தளை, கண்டி, சென்கூம்ஸ் மற்றும் குருநாகல், களுத்துறை, இரத்தினபுரி ஆகிய தோட்டங்களிலுள்ள தொழிலாளர்களும், 2,500 ரூபாய் கொடுப்பனவில் தாம் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக முறையிட்டுள்ளனர்.
குறிப்பாக பதுளை மாவட்டத்திலுள்ள 300 தோட்டங்களில் சுமார் 200 தோட்டங்களுக்கு 1,500 ரூபாய்க்கும் குறைவான கொடுப்பனவே வழங்கப்பட்டுள்ளது.

சில தோட்டங்களில் வேலைநாட்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன் அரை நாட்களுக்கான சம்பளத்துடன் இணைத்தே தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி பெற்றுக்கொடுத்ததாக கூறப்படும் 2,500 ரூபாய் கொடுப்பணவில் குளறுபடிகளே நிகழ்ந்து வருகின்றன' என்றார்.

'இ.தொ.கா எப்போதும் தொழிலாளர்களின் நலன்கருதியே செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் வாரங்களில்
இ.தொ.கவின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து தோட்டத் தொழிலாளர்கள் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்' என அமைச்சர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .