Kogilavani / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன் ரஞ்சித்ராஜபக்ஷ
பொகவந்தலாவை டின்சின் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத 450 கிலோகிராம் நெத்தலியை, சுகாதார பரிசோதகர்கள் இன்றுப் புதன்கிழமை கைப்பற்றியுள்ளதுடன் தீயிலிட்டு அழித்துமுள்ளனர்.
பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து, டின்சின் நகருக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சுகதார பரிசோதகர்கள், மேற்படி வர்த்தக நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெத்தலியை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான நெத்தலி கைப்பற்றப்பட்டதாக அவர்கள் மேலும் கூறினர்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .