Kogilavani / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
'நான் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்துக் கொண்டவன். இந்த கட்சியின் கொள்கை பிடித்ததினாலேயே அதில் இணைந்தேன். ம.ம.மு.வின் கட்சிக் கொள்கை எனக்கு பிடிக்கும். இதன்மூலம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்' என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தர்.
மலையக மக்கள் முன்னணியின் ஆரம்ப கால அங்கத்தவரும் முன்னாள் செயலாளர் நாயகமுமான வீ.ஏ.காதர், லண்டனிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.
இவரை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு, பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்;ட விரிவுரையாளரும் பிரதி செயலாளருமான எஸ்.விஜயசந்திரனின் ஏற்பாட்டில் ஹட்டன் திலகாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரைத்த அவர்,
'சிலர் வெள்ளை ஆடு என்கின்றனர். சிலர் கருப்பு ஆடு என்கின்றனர். அது எதுவும் எனக்கு தேவையில்லாத ஒன்று. நாங்கள் மலையகத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியை அமைத்து வெற்றிகரமாக சுதந்திரமாக வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றோம். அந்த சுதந்திரத்தைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. எனவே அனைவரும் ஒற்றமையாக செயற்பட்டு மலைய மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .