Sudharshini / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
மஸ்கெலியா நகரில் பொதுமக்களுக்கும் வர்த்தகர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கும் இடையூறு விளைவித்த 4பேரை, அங்கொடையிலுள்ள மனநோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு ஹட்டன் பதில் நீதவான் எஸ்.இராஜேந்திரன் நேற்று (30) உத்தரவிட்டுள்ளார்.
மூன்று பெண்கள் உட்பட நால்வர் அடங்கிய அக்குழுவினர் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், அந்த முறைப்பாட்டுக்கு இணங்க மேற்படி நால்வரையும் கைது செய்த பொலிஸார், அவர்களை நீதவான்; முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.
இவர்கள் நால்வரையும் பொறுப்பேற்க உறவினர்கள் எவரும் முன்வராத நிலையிலேயே அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்ததாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.
17 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago
2 hours ago