2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

'மலையக மாணவர்கள் கல்வியில் கவனம்செலுத்த வேண்டும்'

Kogilavani   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

'கடந்த காலங்களில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சுக்கென, 400 அல்லது 500 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித பாகுபாடுகளுமின்றி, மத்திய மாகாண தமிழ் கல்விக்கு பாரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். குறிப்பாக நுவரெலியா தோட்ட பாடசாலைகளை அபிவிருத்திச் செய்வதற்காக மட்டும் 1,200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இது எமக்கு கிடைத்த பாரிய நிதியாகும்' என மத்திய மாகாண விவசாய, மீன்பிடி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் எம்.ராமேஸ்வரன் தெரிவித்தார்.

'இதனை கருத்திற்கொண்டு மாணவர்கள் தமது பெறுபேறு அடைவு மட்டத்தை அதிகரித்துக்காட்ட வேண்டும். ஒரு காலத்தில் 10 இலட்சம் பேர் தோட்டத்தில் வேலை செய்தார்கள். ஆனால், இன்று அது ஒன்றரை இலட்சமாக மாறியுள்ளது, நாளை 50,000 மாறும். எனவே, நாம் என்னாலும் தோட்டத் தொழிலை மாத்திரம் நம்பியிருக்க முடியாது. எமது பிள்ளகைள் அரச உத்தியோகங்களுக்குச் செல்ல வேண்டும். அதற்குச் சிறந்த கல்வி அறிவு அவசியம்' என்றும் அவர் கூறினார்.

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட செனன் தமிழ் வித்தியாலத்தில், சுமார் 40 இலட்சம் ரூபாய் செலவில்  நிர்மாணிக்கப்படவுள்ள பாடசாலை கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (19) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'எமது சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் கல்வித் துறையில் மட்டுமே அதனை செய்ய முடியும். அன்று சௌமிய மூரத்தித் தொண்டமான் தீர்க்க தரிசனத்ததுடன் தோட்டங்கள் தோறும் பாடசாலைகளை உருவாக்கினார். அதனால் நாம் இன்று 50,000 வரை அரச உத்தியோகங்களை பெற்றுக்கொள்ள வாய்பேற்பட்டுள்ளது. இந்த தொகை மேலும் அதிகரிக்க வேண்டுமெனில், கல்வியில் நாம் சாதனைகளை படைக்க வேண்டும். இதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயப்படவேண்டும்' என அவர் கோரினார்.

பாடசாலையின் அதிபர் சனமுகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,   மத்திய மாகாணசபை உறுப்பினர்களான பிலிப்குமார், கணபதி கணகராஜ், கல்வி அமைச்சின் தமிழ் பிரிவு உதவி செயலாளர் அ.சத்தியேந்திரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .