2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

26 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Sudharshini   / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மஸ்கெலியா, பொகவந்தலாவை மற்றும் அம்பகமுவ பிரதேச சுகாதார பரிசோதகர்களினால் மஸ்கெலியா, கினிகத்தேனை நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, காலவதியான பொருட்கள் விற்பனை உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட 26 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் 18ஆம்  திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, காலாவதியான பொருட்கள் விற்பனை, சுத்தம் இன்மை, உரிமை பத்திரம் இன்மை உள்ளிட்ட  குற்றச்சாட்டுகளில் மஸ்கெலியா நகரில் 14 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் கினிகத்தேனையில் 12 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேற்படி 26 பேரையும் ஜனவரி 08 திகதி ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக சுகாதார பரிசோகர் ஜெய் கணேசன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .