2025 மே 07, புதன்கிழமை

12 வயது பாடசாலை மாணவிக்கு தொற்று

Kogilavani   / 2020 நவம்பர் 10 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பிரதேசத்தில், 12 வயது பாடசாலை மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பொதுசுகாதார பரிசோதகர் பிரிவில், 163 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலே, மேற்படி மாணவி தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

மாணவியின் குடும்பத்தில், வேறு எவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்றுத் தெரிவிக்கப்படுகிறது.

பேலியாகொட மீன்சந்தையில் பணிப்புரிந்த மஸ்கெலியாவைச் சேர்ந்த நபரொருவின் வீட்டில், அண்மையில் நடந்த நிகழ்வுக்கு, மேற்படி சிறுமி உட்பட அவரது குடும்பத்தினர் சென்றுவந்துள்ளனர் என்றும் இதனூடாகவே, சிறுமி தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சிறுமி அவரது தாயாருடன் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X