Kogilavani / 2020 நவம்பர் 04 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தால், மலையக மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என்று தெரிவித்துள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், இதன் காரணமாகவே, தான் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்ததாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், அரசாங்கம் ஆட்சி அமைத்து ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், மலையக மக்களுக்குக் கொடுக்கப்பட்ட எந்த ஒரு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை எனச் சாடினார்.
'பெருந்தோட்ட மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை, இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. அவர்களுக்கான அபிவிருத்திச் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. மலையக மக்களுக்கு தீபாவளி கொடுப்பனவாக 15,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதிலும் கம்பனிகளின் தான்தோன்றித்தனமான முடிவின் விளைவாக அது நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்விடயமாகவும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றார்.
'இவ்வாறானதொரு சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று மலையகத்தில் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இன்றளவும் கொரோனா தொற்றுத் தொடர்பாக எந்த ஒரு விழிப்புணர்வு செயற்பாடுகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். மேலும் முறையான பிசிஆர் பரிசோதனைகளும் நோய்தொற்று நீக்கும் பணிகளும் மலையகத்தில் சரிவர முன்னெடுக்கப்படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உரிய முறையில் நிவாரணமும் கிடைக்கப்பெறவில்லை" என்றார்.
இந்நிலையிலேயே அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக தான் வாக்களித்ததாகவும் இந்தச் சட்டமூலத்தால் மலையக மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது என கருதியே தான் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago