Editorial / 2020 மே 25 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தில் 5000 ரூபாய் நிவாரணம் வழங்களில் இழுத்தடிப்புகளும் கழுத்தறுப்புகளும் தொடர்வதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவித்த குமார் தெரிவித்தள்ளார்.
பதுளையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிவாரண பணம் தம்மாலேயே வழங்கப்படுவதாக ஒரு சில மலையக அரசியல்வாதிகள் தம்பட்டம் அடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பபடிவங்கள் 25 ரூபாய் முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு சில இடங்களில் 5000 ரூபாய் கொடுப்பனவுக்காக பாலியல் ரீதியான இலஞ்சம் கோரப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்வாறான சூழலில் நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் பிரதேச அரசியல் வாதிகளை ஈடுபடுத்த வேண்டாம் என, தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளதை வரவேற்பதாக தெரிவித்துள்ள அவர், இனியாவது எந்தவித பாகுபாடுகளும் இன்றி பெருந்தோட்ட மக்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என எதிர்பார்பதாக தெரிவித்துள்ளார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago