2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

Editorial   / 2017 செப்டெம்பர் 23 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுங்காயமடைந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து மஸ்கெலியாவுக்குச் சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டி, ​இன்று (23) காலை, ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில்,  நோர்வூட் நிவ்வெளி பிரதேசத்தில், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்தே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதனால் காயமடைந்த மூவரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, ஒருவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .