2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

அதி சிறந்த அதிபர்

Princiya Dixci   / 2015 நவம்பர் 10 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

ஊவா மாகாணத்தின் அதி சிறந்த அதிபருக்கான விருதை ஹாலிஎலைப் பகுதியின் ரொக்கத்தன்னை தமிழ் வித்தியாலய அதிபர் க. சந்திரபோஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். 

கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2015ஆம் ஆண்டுகான 'குரு பிரதீபா பிரபா' விருது வழங்கும் நிகழ்விலேயே அவர் மேற்படி விருதைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

கடந்த 2012, 2013 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் ரொக்கத்தன்னை தமிழ் வித்தியாலய அதிபர் க.சந்திரபோஸ் பதுளைக் கல்வி வலயத்தின் சிறந்த அதிபருக்கான விருதினைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .