Kogilavani / 2016 ஜனவரி 01 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ரமேஷ்
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் 6ஆவது சிரார்த்த தினம், இன்று பிற்பகல் 2 மணிக்கு, ஹட்டன் கிருஷ்ணபவான் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் இராஜாங்க கல்வி அமைச்சருமான வி.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஆரம்ப உரையை ம.ம.மு.வின் செயலாளர் நாயகம் அ.லோறன்ஸும் சிறப்புரையை நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் ஆற்றவுள்ளனர்.
ஞாபகார்த்த உரையை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆற்றவுள்ளார். ,இதேவேளை, காலை 9.00 மணிக்கு ஹட்டன் மாணிக்க பிள்ளையார் மற்றும் கதிரேசன் ஆலயங்களில் விசேட பூசைகளும் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் அமரர் பெ.சந்திரசேகரனின் சிரார்த்த தின நிகழ்வில், அன்னாரது மனைவி சாந்தினிதேவி சந்திரசேகரன் கலந்துகொள்ளபோவதில்லை என்று தெரிவித்தார்.
இந்நினைவு தினம், கட்சி சார்பாக நடைபெறவுள்ளதால், தனது குடும்பம் சார்பில் யாரும் இதில் கலந்துகொள்ளபோவதில்லை எனவும் தனிப்பட்ட முறையில் நினைவு தினத்தை அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .