Editorial / 2020 மே 24 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.சுந்தரலிங்கம்
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை அயோனா தோட்டத்தின் முதலாம் இலக்கத் தேயிலை மலையில், நேற்று (23) மாலை, சிறுத்தைக் குட்டியொன்று பிரதேச மக்கள் கண்டுள்ளனர்.
இந்தத் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைசெய்துக்கொண்டு இருந்த போது, சிறுத்தைக் குட்டியொன்றை நாய்கள் துரத்துவதைக்கண்டுள்ளனர்.
நாய்களைக் கண்டு ஓடிய சிறுத்தைக் குட்டி, அங்கிருந்த மரமொன்றில் ஏறிய பின்னர், இது தொடர்பாக அக்கரபத்தனை பொலிஸாருக்கும் வன இலாக்கா அதிகாரிகளுக்கும், தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மரமொன்றின் சுமார் 40 இடி உயரத்தில் இருந்த சிறுத்தைக் குட்டியை மீட்பதற்காக, சிறுவனொருவனை வனஜீவிகள் திணைக்கள அதிகாரிகள் மரத்தில் ஏற்றிவிட்டபோது, சிறுத்தைக் குட்டி மரத்திலிருந்து இறங்கி காட்டுப் பகுதிக்குள் ஓடிவிட்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தோட்டத்தில் இதுவரையில் ஆறுக்கும் மேற்பட்ட சிறுத்தைக் குட்டிகள் உயிரிழந்துள்ளன என்றும் தேயிலை மலைகள் காடுகளாக மாறியுள்ளமையாலேயே, தேயிலை மலைகளை, சிறுத்தைகள் தங்கள் வசிப்பிடமாக மாற்றிக்கொண்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago