Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
கனடாவில் உள்ள இந்திய பூர்வீக இலங்கைத் தமிழர் பேரவையின் அழைப்பை ஏற்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், எதிர்வரும் 13ஆம் திகதி கனடாவுக்கு பயணிக்கவுள்ளார்.
மேற்படி பேரவையின் 25ஆவது ஆண்டு நிறைவையொட்டி, எதிர்வரும் 25ஆம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள குறிஞ்சி நைட் கலாசார நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் அவரது பாரியாரான இந்திராணி அரவிந்தகுமாரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வு, தீபாவளி பண்டிகையை முன்னிலைப்படுத்தி நடைபெறவிருவுள்ளதாக, கனடாவில் அமைந்துள்ள இந்திய பூர்வீக இலங்கைத் தமிழர் பேரவையின் செயலாளர் ஜே. ஜெய்யிந்தராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விஜயத்தின்போது, இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியிருக்கும், வறுமை கோட்டுக்கு உட்பட்ட இந்தியவம்சாவளி தமிழ் மாணவர்களுக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும், பெருந்தோட்ட அபிவிருத்திகள், மலையக மாணவர்களுக்கு, கனடா நாட்டில் கல்வி கற்பதற்கு புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும், பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago