2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஆசிரியர் வேண்டாம் என கோரிக்கை

Sudharshini   / 2015 நவம்பர் 11 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலப்பனை கல்வி வலயத்துக்குட்பட்ட ரிலாமுள்ள தமிழ் மகா வித்தியாலயத்துக்கு இடம்மாற்றம் பெற்று வந்துள்ள ஆசிரியர் ஒருவரை பாடசாலையில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர், பாடசாலை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்படி ஆசிரியர் வலப்பனை எம்மஸ்ட் தமிழ் வித்தியாலயத்தில் சேவையாற்றி வந்த போது, அப்பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில்  உடப்புஸ்ஸலாவை பொலிஸாரால் கடந்த மாதம் 21ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த ஆசிரியர் ஹங்குரங்கெத்த கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த பாடசாலையில் குறித்த ஆசிரியரை இணைத்துக்கொள்ள வேண்டாம் என அப்பாடசாலையில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்தே அவர், ரிலாமுள்ள தமிழ் மகா வித்தியாலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியே ரிலாமுள்ள பாடசாலைக்கு அவர், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பழைய மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .