2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

இ.தொ.கா சார்பில் கேகாலை மாவட்டத்துக்கு பிரதிநிதியை நியமிக்குமாறு ஜீவனிடம் வேண்டுகோள்

Editorial   / 2020 செப்டெம்பர் 04 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை மாவட்ட மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்கு ஒரு பிரதிநிதி இல்லை என்றும் எனவே, இம்முறையேனும் இ.தொ.கா சார்பில் ஒரு பிரதிதியை அம்மாவட்டத்துக்கு நியமிக்குமாறும், கேகாலை மாவட்ட மக்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேகாலை மாவட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்,  கொட்டகலை சி.எல்.எப். வளாகக் கேட்போர் கூடத்தில், நேற்று முன்தினம் (2) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே, இவ்விடயம் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சுயத்தொழில் ஊக்குவிப்பு விடயத்தில், கேகாலை மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு முதலிடம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேவேளை, கேகாலை மாவட்டத் தமிழர்களுக்கான அங்கிகாரம் மறுக்கப்பட்டு வருவதாகவும் எனவே, அங்கிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு இராஜாங்க அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுக்குமாறும் கேகாலை மாவட்ட மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதைதத்தவிர கேகாலை மாவட்ட பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது இராஜாங்க அமைச்சர் ஜீவனின் கவனத்துக்குக் கொண்டுச்செல்லப்பட்டது.

அம்மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .