2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

உயிர்வாயு திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றும்படி கோரிக்கை

Sudharshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் பஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயிர்வாயு செயற்றிட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றுபடி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்லும் இடத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதால், நோய்கள் பரவகூடிய வாய்ப்புள்ளதெனவும் அதிகளவு துர்நாற்றம் வீச கூடும் எனவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு இத்திட்டத்தை நகரசபைக்கு சொந்தமான வேறு ஓர் இடத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பதில் செயலாளரிடம் வினவிய போது,

திண்ம கழிவு முகாமைத்துவத்தின் ஒரு பகுதியாகவே இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தின் மின்சக்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்,  இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பரிசோதனைகளின் பின்னரே இவ்விடம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நிறைவடைந்த பின்னர்  நகரசபையிடம் கையளிக்கப்படும். இந்த உயிர்வாயு உற்பத்தியின் ஊடாக சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாது. பல முறை ஆய்வு செய்ததன் பின்னரே இந்த செய்யற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என செயலாளர் தெரிவித்தார்.

மேலும், இந்த செயற்றிட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் உயிர்வாயுவை, அப்பகுதியிலுள்ள கடைகளுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் திண்ம கழிவின் ஊடாக கூட்டு பசளை உற்பத்தியை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .