Editorial / 2020 ஜூன் 15 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்துக்கு, சட்டபூர்வமாகவும் ஜனநாயக ரீதியாகவும் தெரிவுசெய்யப்பட்ட பொதுச் செயலாளர் தான் மட்டுமே என்று தெரிவித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் வடிவேல் சுரேஷ், நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் தடையுத்தரவும் தற்காலிகமானதேயன்றி நிரந்தரமானதல்ல என்றும் தெரிவித்தார்.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சட்டபூர்வமானதும் ஜனநாயக ரீதியாவும் தெரிவுசெய்யப்பட்ட பொதுச்செயலாளர் தான் மட்டுமே என்றும் எனவே, சங்கத்தின் புதிய நியமனங்கள் தொடர்பில், மக்களும் சங்கத்தின் அங்கத்தவர்களும் உத்தியோகத்தர்களும் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக நவீஸ் திஸாநாயக்கவும் செயலாளராக ஆர்.யோகராஜவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் கருத்துரைப்பதற்காக, பதுளை வின்டேஜ் விடுதியில், நேற்று (14) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ஆறு தசாப்த காலங்களாக சேவையாற்றி வரும் பாரியதொரு தொழிற்சங்கமாகும் என்றும் இந்தச் சங்கத்துக்கு, அதிசிறந்த யாப்பொன்று உள்ளது என்றும் யாப்பின் அடிப்படையில் தெரிவான தலைவர் பொதுச்செயலாளரும் இருந்தே வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
சங்கத்தில் தலைவர், செயலாளர் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமேயானால், அதனை சங்கத்தின் வருடாந்த மாநாட்டின் மூலமே மேற்கொள்ள முடியும் என்றும் எதேச்சதிகார போக்கில் தான்தோன்றித்தனமாக எதனையும் முன்னெடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
சங்கத்தின் செயற்குழுவில் 85 பேர் இருந்து வருகின்றனர் என்றும் 46 சங்க செயலகங்களைக் கொண்டு 200க்கு மேற்பட்ட உத்தியோகஸ்தர், ஊழியர்களைக் உள்ளடக்கி தொழிற்சங்கம் இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
“எமது கட்சியில் உருவான தலைமைத்துவப் போட்டியில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் எமது மக்களை பலிகடாக்களாக்குவதற்கு எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. எனது சங்கத்தையும் சங்க உறுப்பினர்களையும், உத்தியோகத்தர்களையும் ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு, என் மீதும் சங்கத்தின் தலைவர் மீதும் சுமத்தப்பட்டிருக்கின்றன. அப்பொறுப்புக்களிலிருந்து எம்மால் விடுபட்டுச்செல்ல முடியாது” என்றார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago