2026 மார்ச் 30, திங்கட்கிழமை

ஏ9 வீதியில் தீ பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!

Freelancer   / 2022 பெப்ரவரி 10 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் நாவுல - அரங்கல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு நேற்று (09) இரவு 10 மணியளவில் மாத்தளை செல்லும் வழியில் கடை ஒன்றுக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போது தீப்பிடித்துள்ளது.
 
மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததில் அருகிலிருந்த கடைக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.
 
எனினும் தீயினால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பதுடன் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
 
சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .