Princiya Dixci / 2016 செப்டெம்பர் 05 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன், செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரஸ்பி தோட்ட பெரிய சூரியகந்தை பிரிவிலுள்ள 7 வயதுச் சிறுவனொருவனை, அவனது சிறிய தாய், கொதிநீரில் தள்ளியதில், குறித்த சிறுவனின் கைகள் மற்றும் கண்கள் ஆகியன வெந்து போயுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது, சிறுவனின் தந்தை விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தையான பிச்சை சரவணராஜாவால் திங்கட்கிழமை (05) வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது மகனான யுவராஜ் (வயது 7) மல்லியப்பு தமிழ் வித்தியாலயத்தில் 2ஆம் ஆண்டில் கல்விப்பயின்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிறுவனின் தாய், கணவனை பிரிந்து வேறொருவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால், குறித்த நபர் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சிறுவனின் சிறிய தாயும் அவருடைய தாயாரும் (பாட்டியும்) சிறுவனை தினந்தோறும் சித்திரவதை செய்து வந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று அச்சிறுவனை கொதிநீர் தாங்கிய பாத்திரத்தில் அமிழ்த்தி, ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவிட்டனர்.
விறகு வெட்டச்சென்று வீட்டுக்கு திரும்பிய தந்தை, தனது மகனை தேடியபோது, அன்றைய தினம் இரவு 8 மணியளவிலேயே, சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மகனை மீட்ட தந்தை, இரவு 8.30 மணிக்கு ஸ்டொக்கம் தோட்ட வைத்தியரிடம் கொண்டுச் சென்று சிறுவனுக்கு மருந்து பூசிக்கொண்டு வந்துள்ளார்.
எனினும், மகனின் முகம், கைகள் வீங்கியதால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு, மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தார்.
எனினும், மேலதிக சிசிச்சைகளுக்காக அச்சிறுவன், நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக மாற்றப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான பெண்கள் இருவரையும் கைது செய்யுமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க பணித்துள்ளார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .