Editorial / 2020 மே 12 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எஸ்.சதீஸ்
ஹட்டனில் ஓட்டோ தீ வைப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கும் இருவரை, சீசீடிவியிலுள்ள காணொளியின் உதவியுடன் கைது செய்துள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் பின் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த ஓட்டோவோவுக்கு, நேற்று (11) அதிகாலை தீ வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தத் தீ வைப்புச் சம்பவம், அப்பகுதியிலுள்ள சீ.சீ.டி.வி கமெராவில் பதிவாகியிருந்த நிலையிலேயே, அதை ஆதாரமாகக் கொண்டு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ஓட்டோவில் இருந்து அவசரத் தேவைக்காக பெற்றோல் களவாடியதாகவும் எனினும், பெற்றோல் திறப்பை மூடுவதற்காக, தீக்குச்சியைப் பற்றவைத்த போதே, ஓட்டோ தீ பித்துவிட்டதாகவும் இதன்பின்னரே தாங்கள் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Apr 2026
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Apr 2026
19 Apr 2026