Kogilavani / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
கூட்டொப்பந்தம் முடிவடைந்து ஒரு வருடமும் ஐந்து மாதங்களும் கடந்தப்போதிலும், இதுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இதனால் தாம் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தோட்ட நிர்வாகங்கள் குறைந்த நாட்களுக்கே தொழிலாளர்களுக்கு வேலை வழங்குகின்றன. இதனால் பொருளாதார ரீதியில் பாரிய இடர்களை சந்திப்பதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
'தொழிற்சங்கங்களுக்கு மாதாந்த சந்தா வழங்கியப் போதிலும் தொழிற்சங்கவாதிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதில்லை.
தோட்ட நிர்வாகங்களால் பராமரிக்கப்படாமல் பல ஏக்கர் தேயிலை மலைகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டிருக்கும் தேயிலை மலைகள் தொடர்பில் தோட்ட கமிட்டி தலைவர்கள், தொழிற்சங்க காரியாலயங்களுக்கு முறைபாடுகளை வழங்கியப் போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை' என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .