Administrator / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
கொத்மலையில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற விபத்தின்போது, வாகன சாரதியை அடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் நபர்களை, கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்;.
கண்டி-நுவரெலியா பிரதான வீதியின் வெதமுல்ல தோட்டப் பகுதியில் வைத்து வீதியை கடக்கமுயன்ற பெண்ணொருவர் மீது, லொறியொன்று மோதியதில் அப்பெண் ஸ்தலத்திலேயே பலியானார்.
திங்கட்கிழமை (28) மாலை 3.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தில், வெதமுல்ல - இறம்பொடை ஆர்.பீ பிரிவைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயான பெருமாள் கோகிலா (வயது 34) என்பவரே பலியாகியுள்ளார்.
நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறியே, அப்பெண் மீது மோதியுள்ளது. சம்பவத்தையடுத்து லொறியை சுற்றிவளைத்த பிரதேசவாசிகள், லொறிமீது தாக்குதல் நடத்தியதுடன் சாரதியையை லொறிக்குள்ளிலிருந்து வெளியே இழுத்தெடுக்கவும் முயற்சித்தனர். இன்னும் சிலர், கற்கள் மற்றும் தடிகளைப் பயன்படுத்தி லொறிமீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால், லொறியின் சாரதிக்கு தலையில் சிறு காயம் ஏற்பட்டதுடன், நுவரெலியா-கண்டி பிரதான வீதியில் சில மணிநேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
சம்பவத்தை கேள்வியுற்று ஸ்தலத்துக்கு விரைந்த கொத்மலை பொலிஸார், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தாக்குதலில் காயமடைந்த லொரியின் சாரதி, கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்களை இன்னும் அடையாளம் காணவில்லை என்றும் அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .