Gavitha / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
சியாம்பலாண்டுவைப் பகுதியிலுள்ள பக்தராவை குளத்தில் நீராடச்சென்ற இளம் ஆசிரியரொருவர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.
புத்தல சிங்கள தேசிய பாடசாலை ஆசிரியரான 29 வயது நிரம்பிய நாமல் பிரியங்கர என்பவரே, நீரில் மூழ்கி உயிழந்துள்ளார்.
நீராடிக் கொண்டிருந்த மேற்படி ஆசிரியர், நீரில் மூழ்கியதையடுத்து, குளத்தில் நீராடிக் கொண்டிருந்த ஏனையவர்கள், அவரை மீட்டு மொனராகலை அரசினர் மருத்துமனையில் அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்புடைய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .