Kogilavani / 2016 ஜனவரி 03 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கண்டி, கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்துக்கு உட்பட்ட, 10 பாடசாலைகளை சகல வசதிகளும் கொண்ட பாடசாலைகளாக அபிவிருத்து செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கட்டுகஸ்தோட்டை வலய கல்விப் பணிப்பாளர் வை.பீ.எம்.யாப்பாரத்ன தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ், குருகொடை ஆண்கள் பாடசாலை, கொனகலகல சத்தானந்த மஹா வித்தியாலயம், ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொஹாகொடை மஹா வித்தியாலயம், கண்டி ஆனந்த மஹா வித்தியாலயம், ஹல்ஒழுவ மஹா வித்தியாலயம், பூஜாபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பூஜாபிட்டிய தேசிய பாடசாலை, ஜமாலிய முஸ்லிம் மஹா வித்தியாலயம், கலகெதர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜப்பார் மத்திய கல்லூரி, கலகெதர மத்திய கல்லூரி, ஹத்தரலியத்த பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹத்தரலியத்த மத்திய
கல்லூரி ஆகிய பாடசாலைகளே அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதனை தவிர வலயத்திலுள்ள 121 பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகக் கல்வியமைச்சினால் 170 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .