Gavitha / 2015 நவம்பர் 09 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அக்குறணை கசாவத்தை பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து சுமார் 25 இலட்சம் ரூபாய் பெருமதியான கராம்பு மற்றும் தங்க ஆபரணங்களை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்டதாக கூறப்படும் ஒரு இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள், மடவலை பிரதேசத்தில் உள்ள அடகு கடையொன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில், கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான திருட்டு சம்பவங்கள் இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்த பொலிஸார், திருடப்பட்ட கராம்புகளில் சுமார் 2,200 கிலோ கிராம் கராம்பு இதுவரையிலும் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் கண்டி பதில் நீதவான் ஜகத் மஹகெதர முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு வரையிலும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .