Kogilavani / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}



பா.திருஞானம்
கண்டி, தெல்தோட்ட பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிரேட்வெளித் தோட்டத்தில்
பொதுமக்கள் தொழில்புரியும் காணியை அளப்பதற்கு முயன்றமையால், அங்கு நேற்று (18) அமைதியின்மை ஏற்பட்டது.
தோட்டத்துக்கள் வாகனங்களுடன் திடீரென வந்த தனியார் ஒருவர், இந்தத் தோட்டத்தில், சுமார் 25 ஏக்கர் தனக்குச் சொந்தமானது எனவும் அந்த துண்டுக்காணியை அளவையாளரைக் கொண்டு அளப்பதற்கும், அவர் முயன்றுள்ளார்.
இந்தச் செயற்பாட்டால், அந்தத் தோட்ட தொழிலாளர்களுக்கும் குறித்த நபருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், வாகனங்களைத் தோட்டத்துக்குள் வைத்து, வாயிற்கதவைத் தொழிலாளர்கள் மூடியதுடன், தோட்டக்காணியை அளப்பதற்கு விடமாட்டோம் என்றும் கோஷமெழுப்பினர்.
இந்தத் தோட்டம், அரச பொருந்தோட்ட யாக்க நிர்வாகத்தின் கீழே நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
அங்கு, சுமார் 200 குடும்பங்களில் 1,000க்கு மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். 120 தொழிலாளர்கள் தோட்டத்தில் வேலை செய்கின்றனர்.
தோட்டம் முறையாக நிர்வாகிக்கப்படாமையால் தொழிலாளர்களுக்கு முறையான வேலை வழங்கப்படுவதில்லை. இதனால், தங்களுடைய வருமானத்துக்காக அங்கிருந்து பலர் வெளியில் சென்று வேலைச்செய்கின்றனர்.
வேலை செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய, ஊழியர் சேமலாப நிதி (ஈ.பி.எப்), ஊழியர் நம்பிக்கை நிதி (ஈ.டி.எப்) கூட வழங்கப்படுவதில்லை.
அதுமட்டுமன்றி, தற்போது வேலை செய்து கொண்டிருப்பவர்களும் இதேபோன்றதொரு நிலைமைக்கே முகங்கொடுத்துள்ளனர் என்று, பொதுமக்கள் தெரிவித்தனர்.
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட தோட்டத்தில் இல்லை. இதனால் மக்கள் நாளாந்தம் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
அரச பெருந்தோட்ட யாக்கம் நிர்வாகம், தங்களது நிர்வாகத்தின் கீழுள்ள தோட்டங்களில் பணிபுரியும் குடும்பமொன்றுக்கு, ஒரு ஏக்கர் காணியைப் பிரித்துக் கொடுத்துவிட்டே, ஏனைய காணித்துண்டுகளை தனியாருக்குக் குத்தகைக்கு விடுகின்றது.
இந்நிலையில், இந்தத் தோட்டத்தில் தொழில்புரியும் தங்களுக்கு இதுவரையிலும் காணித்துண்டுகள் பிரித்துக்கொடுக்கப்படவில்லை எனத் தொழிலாளர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
தங்களுக்குக் கொடுக்க வேண்டிய கொடுப்பனவுகளையும் தங்களுக்கு உரிய காணித்துண்டையும் கொடுத்து விட்டு மிகுதியானவற்றை வேறு யாருக்கும் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கிரேட்வெளித் தோட்டத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதை அடுத்து, விரைந்துவந்த கலஹா பொலிஸார், முத்தரப்புடனும் நேற்று மாலைவரையிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த பேச்சுவார்த்தையில், தோட்டத்தொழிலாளர்கள் 10 பேரை கொழும்புக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அதுதொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கும், நேற்றைய பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
13 minute ago
23 minute ago
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
26 minute ago
34 minute ago