2025 மே 13, செவ்வாய்க்கிழமை

குடிநீரின்றி மக்கள் அவதி

Gavitha   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தளை லக்கல அம்பன்கஹகோரளேயே பிர​தேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முறையான குடிநீர் வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, பிரதேச சபை உறுப்பினர் அசங்க பண்டார தெரிவித்தார்.

மேற்படி பிரதேச சபைக்கு உட்பட்ட ஹுனுகெடெல்ல, பொகுருமான, ரத்முதுகம, லொலுவல, இம்புல்கொல்ல, திப்பட்டுகனத்த, தம்பகமுவ, கும்பல்ஒழுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களே குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர் என்றும் இப்பகுதியில் குடிநீர்த் திட்டமானது ​இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதால், கிணறுகளில் இருக்கும் சேறு கலந்த நீரை குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் கருத்துரைத்த பிரதேச சபையின் தவிசாளர் எம்.யோகராஜா, குடிநீர் பிரச்சினை நிலவும் கிராமங்களுக்கு, பிரதேச சபையினுடாக குடிநீர் பௌசரின் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், குடிநீர் இல்லாத கிராமங்களுக்கு குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கையையும் பிரதேச சபை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X