எஸ்.சதிஸ் / 2020 ஜூன் 04 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்ற நிலையில், மலையகத்திலுள்ள அனைத்து பிரதேச சபைகளும் இணைந்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும்என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அஷோக் கோரியுள்ளார்.
குளவிக்கொட்டுக்கு இலக்காகி, அடுத்தடுத்து இரண்டு பெண்கள் பலியாகியுள்ள சம்பவம் தொடர்பாக, நேற்று (03) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
உயிரிழந்த பெண்களின் உயிருக்கு யார் பொறுப்பு என்று கேள்வியெழுப்பியுள்ள அவர், இதுவரை உயிரிழந்துள்ளவர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.
பணியில் இருக்கும் ஒரு தொழிலாளி உயிரிழந்தால், இழப்பீடுகள் வழங்குவது தொடர்பில் கூட்டு ஒப்பந்தமுறை, தொழில் சட்டங்களில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் ஆனால், இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்க பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அழுத்தம் கொடுப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு தொடர்ந்து இழப்புகளைச் சந்திக்க முடியாது என்றும் எனவே, மலையகத்திலுள்ள அனைத்து பிரதேச சபைகளும் இந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும் என்றும் அவர் கோரினார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago