Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
'இந்தியாவின் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக எமது படைவீரர்களை அரசாங்கம் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். அதற்கூடாக இருநாட்டு உறவைப் பலப்படுத்த முடியும்' என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
'இன்று இந்தியாவின் சென்னை நகரத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தால் அம்மக்கள் பல்வேறு இழப்புகளை எதிர்கொண்டுள்ளனர்;. இந்தியா எமது அண்டைய நாடு என்ற வகையிலும் அவர்கள் எமது தொப்புள் கொடி உறவுகள் என்ற வகையிலும் நாம் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி, ரஜவெல இந்து தேசிய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'எமது அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேசி மீட்புப் பணிகளுக்காக எமது படைகளையும் அனுப்பிவைக்குமானால், அது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும்.
அத்துடன், இந்தியாவின் தமிழ் நாட்டு மக்கள் எமது முப்படைகள் மீது கொண்டுள்ள தவறான எண்ணம் இல்லாமல் போகும். எமது படை வீரர்கள் இவ்வாறான நிலைமைகளைச் சமாளிப்பதிலும் மக்களைப் பாதுகாப்பதிலும் மிகவும் திறமையானவர்கள்.
மீரியபெத்த சம்பவத்தின் போது, இந்திய அரசாங்கம், தூதரகத்தின் ஊடாக பல உதவிகளை எமக்கு செய்திருந்தது. எனவே, இன்று அவர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள நிலையில் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்' என குறிப்பிட்டார்.
இதேவேளை, 'வரலாற்றில் முதன் முறையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவு - செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இதேவேளை, மலையகத்தில் 10 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அனைத்துத் தமிழர்களும் வாக்களித்ததற்கூடாக மீண்டும் இந்த அரசாங்கத்துக்குத் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளனர். எனவே, தமிழர்களை மறந்து இந்த அரசாங்கம் செயற்பட முடியாது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
3 hours ago