2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

சோனியாவின் உதவியால் சிக்கிய திருடன்

Sudharshini   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அலவத்துகொடை நகரில் அமைந்துள்ள விஹாரை ஒன்றின் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடியதாக கூறப்படும் 20 வயது  இளைஞனை,  'சோனியா' என்றழைக்கப்படும் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் இன்று (27) கைதுசெய்துள்ளதுடன் 510 ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளனர்.

விஹாரைக்கு அருகில் அமைந்துள்ள கட்டடமொன்றில் வேலை செய்துவந்த   இளைஞன், விஹாரையில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இத்திருட்டில் ஈடுபட்டுள்ளதாக சனிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டுக்கு அமைய  பொலிஸார் இளைஞனை கைதுசெய்துள்ளனர். 

மேற்படி சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைக்கமைய, உண்டியலில் இருந்து 510 ரூபாய் பணத்தை மட்டுமே தான் எடுத்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .