Gavitha / 2015 நவம்பர் 09 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஆறு வயது நிரம்பிய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபர், தாக்கப்பட்ட நிலையில் எத்திமலை அரசினர் மருத்துவமனையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட அச்சிறுமியும் அதே வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
மாடு வியாபாரத்துக்காக குறித்த நபர், கடந்த 7ஆம் திகதியன்று எத்திமலைப்பகுதிக்கு வந்துள்ளார். அவர், அப்பகுதியில் வீடொன்றில் தங்கியுள்ளனர்.
அங்கு தங்கியிருந்த குறித்த நபர், அவ்வீட்டிலிருந்த ஆறு வயது நிரம்பிய சிறுமியுடன் பாசத்துடன் பழகுவது போன்று பழகி அச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனைக் கண்ட சிறுமியின் சகோதரனான 15 வயது நிரம்பிய சிறுவன், பொல்லொன்றினால் அந்நபரை தாக்கியுள்ளார்.
இதையடுத்து அந்நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சந்தேகநபர், சுகமடைந்ததும், அவரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாக எத்திமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .