R.Maheshwary / 2022 பெப்ரவரி 10 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை- இரத்தோட்டை ரிவஸ்டன் வீதியில் அமைந்துள்ள பம்பரகிரி நீர்வீழ்ச்சியைப் பார்வையிட வருபவர்களால் நீர்வீழ்ச்சியின் அழகுக்கும் சுற்றாடலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நக்கீல்ஸ், பிட்டவல பத்தனையைப் பார்வையிடுவதற்காக வருகைத் தருவதுடன், அவ்வாறு வருகைத் தருபவர்களின் மனம் கவர்ந்த இடமாக குறித்த நீர்வீழ்ச்சி காணப்படுகின்றது.
எனினும் சில உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மதுபோதையில் குறித்த நீர்வீழ்ச்சிப் பகுதியில் மோசமாக செயற்படுவதாகவும் இதன்மூலம் தேவையற்ற உயிரிழப்புகளும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியின் ஆபத்தான இடங்கள் தொடர்பில் அறிவிப்பு பலகைககள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது அவை காணாமல் போயுள்ளதுடன், நீர்வீழ்ச்சியின் அழகு, அங்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் செயற்பாடுகளால் அழிவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சுற்றுலா வரும் சிலர், கவனயீனத்தால் இங்கு தவறி விழுந்து உயிரிழப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
18 minute ago
27 minute ago
33 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
27 minute ago
33 minute ago
39 minute ago