Princiya Dixci / 2015 நவம்பர் 10 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-காஞ்சன குமார அரியதாச
தம்புள்ள, தலகிரியாகம பிரதேசத்தில் தலேவெல பிரதான வீதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர், பாதசாரியொருவரை மோதியதில் குறித்த பாதசாரி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற இச்சம்பவத்தில் தலங்கிரியாகம பகுதியைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தந்தையான ஏ.செல்வதுரை (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
டிப்பர் வண்டியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவரைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .