Thipaan / 2016 செப்டெம்பர் 20 , பி.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஜனனி ஞானசேகரன்
கடந்த 17 மாதங்களாக இழுபறி நிலையில் இருக்கும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை, நாளை வியாழக்கிழமை காலை இடம்பெறுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சிலேயே பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றும், அப்பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு சய்கின்றனர்.
எட்டப்பட்டால், அன்று மாலையே ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமாக சௌமிய பவானில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே காங்கிரஸின்
தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.
எனினும், அடிப்படைச் சம்பளம் எவ்வளவுக்கு அதிகரிக்கப்படும், ஏனைய கொடுப்பனவுகள் எப்படி அதிகரிக்கப்படும் என்பது போன்ற இறுதி முடிவு, இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையின் போதே எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
எது எவ்வாறாயினும், தோட்டத் தொழிலாளர்களுக்கு, நியாயமான சம்பளத்தையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு காங்கிரஸ் ஒருபோதும் பின்னிற்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
'1992ஆம் ஆண்டு முதல், போராட்டங்களில் மூலமாகவும் சுமுகமான முறையிலும் சம்பள உயர்வைப் பலமுறை பெற்றுள்ளோம். ஆனால், இவ்விடயத்தில் சம்பந்தம் இல்லாதவர்கள், எங்களின் மேல் பழி சுமத்துகின்றனர். தங்களின் தவறை மறைப்பதற்காகவே, இவர்கள் இவ்வாறு செய்கின்றனர். அவற்றையெல்லாம் காங்கிரஸ், ஒருபோதும் கணக்கில் எடுக்காது. தேவையான நேரம், தொழிலாளர்களுடன் காங்கிரஸ் இருக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .