Sudharshini / 2015 டிசெம்பர் 15 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
எல்ல, வெல்லவாயவிலுள்ள விகாரையில் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபரை, சீசீடிவி கமெராவின் உதவியுடன் எல்ல
பொலிஸார், திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.
குறித்த நபர், விகாரைக்குள் புகுந்து திருட்டில் ஈடுபடுவதை விகாரைக்கு பொறுப்பாக இருந்த தேரர், தனது அறையிலிருந்து சீசீடிவி. கமெராவூடாக கண்காணித்ததுடன் அது தொடர்பில் உடனடியாக பொலிஸுக்கும் அறிவித்துள்ளார்.
ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், மேற்படி நபரை கைதுசெய்ய முற்படும்போது, அவர் தப்பி ஓடியுள்ளார்;.
எனினும், விகாரையைச் சூழவுள்ள மக்கள் அவரை மடக்கிப்பிடித்து, தாக்கிவிட்டனர். இதனால் காயமடைந்த அவர், பொலிஸ் பாதுகாப்புடன் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .