Gavitha / 2020 நவம்பர் 02 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 27 மில்லியன் கிலோகிராம் காய்கறிகள், நேற்று (02) காலை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் குவிக்கப்பட்டது என, மாத்தளை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி காவிரத்ன தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர், தம்புளை நகரத்துக்கு வருகை தராததாலும், காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் உள்ள காய்கறிகளின் தேவையைக் குறிவைத்து, அங்குள்ள ஊரடங்கு உத்தரவின் போது, அதிகளவான காய்கறிகள் அறுவடை செய்யப்படுவதாகவும் அரசாங்கத்தின் திட்டமிடப்படாத தன்னிச்சையான ஊரடங்கு உத்தரவு மற்றும் விநியோக சங்கிலி நிர்வாகத்துக்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லாததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த நிலைமையைத் தணிப்பதற்கான ஒரு திட்டத்தை வகுக்க, ஆழும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அரசியல் பிரதிநிதியையும் மாத்தளை மாவட்டத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
13 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago