Editorial / 2020 மே 25 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
பொதுத் தேர்தலை நடத்தாவிட்டால், பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பையா சதாசிவம் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொவிட்-19 நெருக்கடி காரணமாக, சர்வதேச முதலீட்டாளர்கள், ஆசிய நாடுகளின் முதலீடுகளை மீளப்பெற்று வருகின்றனர் என்றும் இதனால் இலங்கைக்கு பாரிய அளவில் பாதிப்பு ஏற்படவுள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில், அரசியல் வேறுபாடுகளைக் களைந்து, நாடு என்ற ரீதியில் சிந்தித்து, ஸ்திரமான நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்கினால்தான், இந்த நெருக்கடியில் இருந்து விடுபட முடியும் என அவர் கூறினார்.
இதேவேளை, முதியோர், நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை வீட்டுக்கே சென்று கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் பணித்துள்ள நிலையில், அதிகாரிகள் அவ்வாறு வீட்டுக்குச் சென்று கொடுப்பதில்லை என, முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
எனினும் இது குறித்து நடவடிக்கைகளை எடுப்பதாக, நுவரெலியா மாவட்ட செயலாளர் புஷ்பகுமார தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago