Editorial / 2017 நவம்பர் 16 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனம் என்ற பெயரில் இயங்கிவந்த தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்ட விவகாரம் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனத்தின் பெயரானது அண்மையில் பூல்பேங் தொழில் பயிற்சி நிலையம் என மாற்றப்பட்டதால் மலையகத்தில் மட்டுமல்லாது இந்தியாவின் தமிழ்நாட்டிலும் பல எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துமாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம்(14) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள நிலையிலேயே,சுஷ்மா சுவராஜ் இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேசவுள்ளதாக தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago