2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

‘தொழிலாளர்களை பாதுகாப்பதில் அலட்சியம்’

Editorial   / 2020 ஜூன் 04 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர அலட்சியப் போக்குடன் இருந்து வருவதற்கான காரணம் என்ன என, மலையக மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்று (03) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இதற்கு முன்னர், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இயந்திரயங்கள் மூலமே ஆபத்து இருந்தது என்றும் எனினும் தற்போது கொழுந்து பறிக்கும் போது இந்த ஆபத்து இருந்து வருவதாகவும் கூறினார்.

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இது வரையான காலப்பகுதியில் மாத்திரம், குளவிக்கொட்டுக்கு இலக்காகி நால்வர் பலியாகியுள்ளனர் என்றும் இந்தத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு யாரேனும் நடவடிக்கை எடுத்துள்ளனரா எனத் தேடிப்பார்க்கும் போது அதற்கான விடை கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தோட்ட நிர்வாகங்கள், உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், குறித்த தோட்ட நிர்வாகங்களுக்கு எதிரான செயற்பாடுகளை தொழிலாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டிருக்கவேண்டும் என்றும் ஆனால் மலையகத்தில் உள்ள தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இன்றுவரை மௌனம் காத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .