Editorial / 2020 மே 20 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி பட்டுகெதர பிரதேசத்தில், நேற்று (19) மாலை ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில், தோணியை செலுத்திச் சென்ற இளைஞர் ஒருவர், தோணி கவழ்ந்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த ஜீவன் ரசிககுமார என்ற (30) இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி இளைஞர், இரு இளைஞர்களுடன் தோணியில் பயணித்துள்ளார் என்றும் தோணி கவிழ்ந்த போது அவ்விரு இளைஞர்களும் நீந்தி கரை சேர்ந்த போதிலும் மேற்படி இளைஞர் நீரில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்nகொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago