2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

நேரில் கண்டவர்களிடம் வாக்குமூலம்

Gavitha   / 2016 ஜனவரி 20 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்பிலிபிட்டியவில் சுமித் பிரசன்ன என்ற இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை (19) எம்பிலிபிட்டியவுக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது, கொலைச் சம்பவத்தை நேரடியாக கண்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதோடு, அதிகாரிகள் சோதனைகளையும் முன்னெடுத்தனர். இதேநேரம், எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, இன்று வியாழக்கிழமை (21) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வாக்குமூலமளிப்பதற்காக ஆஜராகவுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான இடைக்கால அறிக்கையொன்றை, பிரதி பொலிஸ் மா அதிபர் கடந்த திங்கட்கிழமை (18), பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .