2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

’நயவஞ்சக செயலை அரசாங்கம் முன்னெடுக்கிறது’

Editorial   / 2020 மே 18 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கையில் ஐயாயிரம் ரூபாயை கொடுத்து மறு கையால் அதனை மீளப் பெறும் நயவஞ்சக செயலை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் ஐயாயிரம் ரூபாவை வலது கையால் வழங்கி, அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்து இடது கையால் அந்த பணத்தை தந்திரமாக வசூலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் கட்ட ஐயாயிரம் ரூபாய் நிவாரண நிதியே, இன்னும் பூரணமாக வழங்கப்படாத நிலையில் இரண்டாம் கட்ட நிவாரண நிதி வழங்கும் செயற்பாடு இடம்பெற்று வருவது வேடிக்கையானது என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஊழலும் முரண்பாடுகளும் பாகுபாடுகளும் தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ள அவர், அரசின் எந்தவொரு நிவாரண திட்டத்தையும் பெருந்தோட்ட மக்கள் முழுமையாக அனுபவிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக, அவர் கூறியுள்ளார்.

இன்று வரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு எட்டாக் கனியாவே உள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, பெருந்தோட்ட மக்கள் விடயத்தில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .