Kogilavani / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை பெற்றுகொள்ள வேண்டுமாயின் தன்னை தொடர்புகொள்ளுமாறு மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் கோரியுள்ளார்.
'எமது சமூகத்தின் கல்வி வளரச்;சிக்காக பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்;க எண்ணியுள்ளேன். என்னோடு தொடர்புகொண்டால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக உள்ளேன்' என்றும் அவர் கூறினார்.
லிந்துலை, மெரயா பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
'இன்று எமது சமூகம் பல்வேறு துறைகளில் முன்னேறி சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கின்றது. எமது சமூகத்தினர் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற ஆவலில் பல்வேறு வேலைத் திட்டங்களை பாடசாலைகளுக்காக பெற்றுக்கொடுத்து வந்துள்ளேன்.
ஹோல்புறூக் பாடசாலைக்கு புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக ஹோல்புறூக் நகர வளாகத்தில் 2 ஏக்கர் காணியை அண்மையில் பெற்றுக்கொடுத்தேன். அதேபோல் டயகம ஆரம்பப்பிரிவு பாடசாலைக்கு 2 ஏக்கர் காணியை பெற்றுக் கொடுத்துள்ளேன்' என்றும் அவர் கூறினார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago