Kogilavani / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
உடல்நலக் குறைவு காரணமாக, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முத்துசாமி புஸ்பா (வயது 34) என்ற பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் நலின் திலகா ஹேரத்தின் உத்தரவுக்கமையவே, அப்பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்காக, கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெண்ணின் மரண பரிசோதனை, சுயாதீனமாக நடைபெற வேண்டுமென, அவரது உறவினர்கள் கோரியதற்கமைவாகவே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பெண், கழுத்தில் ஏற்பட்ட வலி காரணமாக நுவரெலியாவிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மூன்றுமுறை சிகிச்சைப் பெற்றுள்ளார். அவ்வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மாத்திரைகளினால் உடலில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை (29)
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது இரு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, அப்பெண் உயிரிழந்ததாக தெரியவருகிறது.
தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகக் கூறி, அவரது கணவர், நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இரண்டுமுறை முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .