2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

புதிய கிராமங்களுக்கு மலையக தியாகிகளின் பெயர்கள் சூட்டப்படும்

Sudharshini   / 2015 டிசெம்பர் 27 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ் ஆ.ரமேஸ், மு.இராமச்சந்திரன்

தலாவக்கலை, ஒலிரூட் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிராமத்துக்கு அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன் இக்கிராமம் எதிர்வரும் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

'நல்லிணக்க அரசாங்கத்தின் ஊடாக பெருந்தோட்டப் பகுதிகளில் தற்போது புதிய கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று, டயகம பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் வீடுகளுக்கும் மலையகத்திலுள்ள தியாகிகளின் பெயர்களை சூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது' என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

நாகசேனை, அகரகந்தை தோட்டத்தில் இயங்கிவரும் பாரதி மொழி சங்கத்தின் 5ஆம் ஆண்டு விழா, இன்று (27)  சங்கத்தின் தலைவர்  கு.மோகன்ராஜ்  தலைமையில் தோட்ட கலாசார மண்டப திடலில்;  நடைபெற்றது. இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ';பாரதி, வள்ளுவர், இளங்கோ போன்றவர்களின் பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டு வந்த மன்றங்கள் ஒழிந்து வருகின்றன. இன்று திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்களை கொண்டு அமைக்கப்படும் மன்றங்களினால் பாரம்பரிய கலைகள் அழிவடைகின்றன. இந்த கலாசாரத்தை நாம் எமது மத்தியிலிருந்து அகற்றவேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .