2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

படைவீரர்களை நினைவு கூரும் 116 ஆவது நிகழ்வு

Sudharshini   / 2015 நவம்பர் 10 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெவ்வேறு  யுத்தங்களில் உயிரிழந்த படைவீரர்களை நினைவு கூரும் 116 ஆவது நிகழ்வு, கண்டி ஜோர்ஜ் டி சில்வா பூங்காவில் அமைந்துள்ள யுத்த நினைவுச் சின்னத்துக்கு முன்பாக நடைபெற்றது.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க , நினைவுச் சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இரண்டு உலக யுத்தங்களிலும் உயிர் நீத்த இலங்கை மற்றும் பிரித்தானிய படை வீரர்களின் நினைவாக, பிரித்தானிய   நிர்வாகத்தின் கீழ் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. பின்னர், இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது உயிர்நீத்த படை வீரர்களின் நினைவாக இங்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், கண்டி மேயர் மகேந்திர ரத்வத்தை, சமய தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .