Sudharshini / 2015 டிசெம்பர் 15 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவங்ச
வீதியில் விழுந்துகிடந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயத்தாள்கள் அடங்கிய ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பணத்தை, நபரொருவர் எடுத்துச் சென்று உரியவரிடம் ஒப்படைத்த சம்வமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.
பதுளை, புவக்கொடமுல்லவைச் சேர்ந்த „சிங்ஹ... என்றழைக்கப்படும் சுஜுவ வீரசிங்க என்பவரே இத்தகைய நற்செயலில் ஈடுபட்டுள்ளார்.
இவர், ஊவா கெப்பிட்டல் லயன்ஸ் கிளப் உறுப்பினராவார். சிங்ஹ (சிங்கம்) என்று அழைக்கப்படும் இவர், பதுளை பஸார் வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்த போது அவ்வீதியில் கவனிப்பாரற்றுக் கிடந்த பொதியைக் கண்டெடுத்துள்ளார்.
அப்பொதியைப் பிரித்துப் பார்த்த போது, அதற்குள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயத்தாள்களுடன் ஆள் அடையாள அட்டையொன்றும் இருந்துள்ளது.
அடையாள அட்டையை வைத்து, அந்தப் பணப்பொதிக்குச் சொந்தக்காரரான பதுளையைச் சேர்ந்த டீ.எம்.டபிள்யூ. திஸாநாயக்க என்பவரைக் கண்டுபிடித்துள்ளார்.
பணப்பொதியைத் தவறவிட்ட தான் ஒரு பொறியிலாளர் என்றும் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் விடுமுறைக்காக பதுளையிலுள்ள தனது வீட்டுக்கு வந்தபோதே இப்பணத்தை தவறிவிட்டதாகவும் சிங்ஹவிடம் தெரிவித்துள்ளார்.
பணப்பொதிக்கு உரியவர் இவர்தான் என்று அடையாளப்படுத்திக் கொண்ட „சிங்ஹ... என்றழைக்கப்படும் சுஜீவ வீரசிங்க, அப்பணப் பொதியை பதுளை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.யூ.பி.மானியன்கமவின் முன்னிலையில் வைத்து உரியவரிடம் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .