ஆ.ரமேஸ் / 2020 மே 25 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச் செல்லும் ஆக்ரா-ஓயா ஆற்றுடன் கலக்கும், அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட நாகசேனை, பேராஹம் தோட்ட ஆற்றை மேலும் அகலப்படுத்துமாறு, அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார்.
மழைக்காலத்தில் பெருக்கெடுக்கும் ஆற்று நீர் சீராக வழிந்தோடுவதற்கு வசதிகள் இல்லை என்றும் மண்சரிவுகள் ஏற்படுவதாகவும் அதேசமயம் விவசாயக் காணிகளும் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்தே, இந்த ஆற்றை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் வெள்ள நீரில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, தோட்டத்தில் மாற்று இடங்களில் விவசாயத்தை முன்னெடுக்க, தோட்ட நிர்வாகம் அவர்களுக்கான காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பணித்துள்ளார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago